கட்டுநாயக்க விமான நிலையம் திறந்தாலும் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை!

இன்னும் இரண்டே வாரங்களில் விமான நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் முடிவடைந்துவிடும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 6ஆம் திகதியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் புனரமைப்புப் பணிகளுக்காக காலை 8 மணியில் இருந்து பிற்பகல் 4.30 மணி வரை மூடப்படும் என முன்னர் அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், அதன் பணிகள் துரிதகதியில் இடம்பெற்றுவருவதால், இன்னும் இரண்டே வாரங்களில் முழுமையான பணிகள் முடிந்துவிடும் என்கிறார் அதிகாரி.

இதேவேளை. பெரும்பாலான சீனப் பயணிகள் மத்தள விமான நிலையத்தையே பயன்படுத்துவதி வருகின்றார். இந்நிலையில், பண்டாரநாயக்க விமான நிலையம் இயல்பு நிலைக்கு வரும் வரையில் மத்தள விமான நிலையப் பயன்பாட்டை நிறுத்திவிட வேண்டாமென்றும் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பயண நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதற்கிடையில், இன்னும் இரண்டு வாரங்களில் விமான நிலையத்தை முழுமையாகத் திறந்துவிட ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும், ஆனாலும், விமான நிலையம் திறந்தாலும் பயணிகளுக்கு எந்தவித நன்மையும் உடனடியாகக் கிடைத்துவிடாது.

ஏனெனில், விமான நிலையத் திருத்தப் பணிகள் முடிவடைந்தாலும், சர்வதேச விமான சேவைகள் உடனடியாகத் தமது பயணத் திட்டத்தில் மாற்றங்களைச் செய்வதில் சிக்கல்கள் இருப்பதால், சர்வதேச விமானச் சேவைகள் தற்போது நடைமுறையில் இருப்பது போலவே மாலை 6 மணி முதல் காலை 8.30 மணிவரை மட்டுமே நடைபெறும் என்று அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தியாவுக்கான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானச் சேவைகளில் குறிப்பிடத்தக்களவு மாற்றங்களை உடனடியாகச் செய்ய வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like