சட்ட மா அதிபரிடம் 50 கோடி ரூபா நட்டஈடு சட்டத்தரணி

சட்ட மா அதிபர் திணைக்களத்தில் 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் திகதி தொடக்கம் பணியாற்றிய அரச பெண் சட்டத்தரணி ஒருவர், சட்டமா அதிபரிடம் 50 கோடி ரூபா நட்டஈடு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றில் நேற்று மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

சட்டத்தரணியின் தந்தையும் ஒர் சட்டத்தரணி எனவும் அவரும், அதே மனுவில் சட்டமா அதிபரிடம் 20 கோடி ரூபா நட்டஈடு கோரியுள்ளார்.

தற்போதைய சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, முன்னாள் சட்டமா அதிபர் பலித பெர்னாண்டோ மற்றும் சட்ட மா அதிபர், மேலதிக சொலிஸ்டர் ஜெனரல்கள் உள்ளிட்ட எட்டு பேர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் தம்மை பணி நீக்கியுள்ளதாக சட்டத்தரணி குற்றம் சுமத்தி வழக்குத் தொடர்ந்துள்ளார்.

தனிப்பட்ட குரோதத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு பணி நீக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

தமது மகள் சட்டவிரோதமான முறையில் பணி நீக்கப்பட்டதனால் தந்தை என்ற ரீதியில் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென பெண் சட்டத்தரணியின் தந்தை அதே மனுவில் நட்டஈடு கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like