மரண அறிவித்தல் : திருநாவு அன்ரனி செந்தில் விமலன்

திருநாவு அன்ரனி செந்தில் விமலன்

(Kinder Not Hilfe (KNH) இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி சிறுவர் அபிவிருத்தி லங்காவின் நிர்வாகி)

வவுனியா இறம்பைக் குளத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவு அன்ரன் செந்தில் விமலன் கடந்த (31.08.2018) வெள்ளிக் கிழமை பிரித்தானியா Cardiff இல் காலமானார்.

அன்னார் பூர்ணிமாமேதவியின் அன்புக்கணவரும்,

காலஞ்சென்ற கிராமசேவையாளர் லேனாட் திருநாவு அன்னம்மா தம்பதியரின் அன்புமகனும்,

சின்னையா மோகன் காலஞ்சென்ற சாந்தா தம்பதியரின் அன்பு மருமகனும்,

கவிஷ், அனாசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செந்தில்ராஜன் (அமெரிக்கா), செந்தில்மதி (நெதர்லாண்ட்), செந்தில்ரமணி (பிரித்தானியா), செந்தில்ரூபன் (வவுனியா நகரசபை உறுப்பினர்) , செந்தில்வதனி (பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யஸ்மின், தூஷியா (ஆசிரியர், இரட்டைப் பெரியகுளம்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் இன்று (28.09.2018) வெள்ளிக் கிழமை பி.ப. 3 மணியளவில் வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு புனித அந்தோனியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்.

இறம்பைக்குளம், வவுனியா.
077 6016103

You might also like