வவுனியாவில் பாரிய பண மோசடியில் ஈடுபட்ட பெண் – பணத்தை இழந்தவர்கள் பரிதவிப்பு

வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பவதாக தெரிவித்து பலரிடம் பண மோசடி செய்த பெண் ஒருவரை நேற்று பொலிசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா மூனாமடு பகுதியைச் சேர்ந்த மோகன் சாந்தினி ஹரணி என்ற 39 வயதுடைய பெண் வெளிநாட்டிற்கு அனுப்புவதாகத் தெரிவித்து 40 இலட்சத்திற்கு அதிகமான பணங்களை பெற்றுள்ளார். அதில் சிலர் தமது பணத்தைத்திருப்பிக் கேட்டுள்ளனர். எனினும் ஒருவருக்கு காசோலை மூலம் சிறு தொகைப்பணத்தினை வழங்கியுள்ளார்.

குறித்த நபர் வங்கி சென்றபோது வங்கியில் பணம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து நேற்று காலை பொலிசாரால் குறித்த பெண்மணி கைது செய்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் நேற்று மாலை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியபோது 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளர்.

You might also like