யாழ், முல்லையை சேர்ந்த 24 பேர் விமானநிலையத்தில் : குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

கடந்த யுத்த காலத்தின் போது அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்றிருந்த 24 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் அவுஸ்திரேலியாவில் இருந்து விசேட விமானம் மூலம் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களிடம் தற்போது விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இவர்கள் கடந்த 2016ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்திரேலியா சென்றுள்ளனர்.

முகாம் ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இவர்கள் தற்போது நாடுகடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like