வவுனியாவிலிருந்து கொழும்பிற்கு மோட்டார் சைக்கிலில் செல்ல முற்பட்ட 26வயதுடைய யுவதி கைது

வவுனியாவிலிருந்து கொழும்பிற்கு மோட்டார் சைக்கிலில் கேரளா கஞ்சாவினை கடத்த முற்பட்ட 26 வயதுடைய யுவதியோருவரை நேற்று (30.09.2018) இரவு 9.00 மணியளவில் வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா ஓயார்சின்னக்குளத்தினை சேர்ந்த 26 வயதுடைய யுவதி கொழும்பிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றார்.

அங்கிருந்து வவுனியாவிற்கு மோட்டார் சைக்கிலில் வருகை தந்து கேரளா கஞ்சாவுடன் மீண்டும் கொழும்பினை நோக்கி மோட்டார் சைக்கிலில் புறப்படவிருந்த சமயத்தில் குருமன்காடு பகுதியில் வைத்து வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த யுவதியிடமிருந்து 1கிலோ 620கிராம் கேரளா கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் முன்னினையில் ஆயர்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You might also like