வவுனியாவில் தொடர்ச்சியாக 50வருடம் ஒரே நிறுவனத்தில் பணியாற்றியவர் கௌரவிப்பு

வவுனியாவில்  1966 முதல் 2016வரை ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய பணியாளரைக் கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் வவுனியாவிலுள்ள விருந்தினர் விடுதியில் அண்மையில் வவுனியா வர்த்தகர் சங்கம் சார்பில் இடம்பெற்ற சேவை நலன் பாராட்டும் நிகழ்வில் நிறுவனத்தின் உரிமையாளர் திரு. சி. ஞானசம்பந்தன் தலைமையில் இடம்பெற்றது.

50வருடகாலம் நிறுவனத்தில் பணியாற்றிய திரு. திருமதி. சுப்பிரமணியம் நித்தியானந்தன் தம்பதியினருக்கு மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் திரு. ரி. கே. இராலிங்கம், பிரபல தொழிலதிபர்களான நிறுவனத்தின் உரிமையாளர் திரு. சி. ஞானசம்பந்தன், மற்றும் திரு, எஸ். இராமசாமி ஆகியோர் கலந்து கொண்டு கௌரவிப்பு செய்து வைத்தனர். வவுனியா மாவட்டத்தில் முதலாவது 50வருடம் ஒரு நிறுவனத்தில் பணியாற்றியவர் என்ற பெயரையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like