மிதிவெடிகளை அகற்றி மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்த இத்தாவில் மக்கள் வேண்டுகோள்

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளியின் இத்தாவில் வடக்குப் பகுதியில் மிதிவெடிகளை அகற்றி மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு, அதிகாரிகளிடம் இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இத்தாவில் வடக்குப் பகுதியில் மிதிவெடிகள் காரணமாக, 75 குடும்பங்கள்  மீள் குடியேறாமல் இருப்பதாகவும் மிதிவெடிகளை விரைவாக அகற்றி தமது மீள் குடியேற்றத்துக்கு வழியேற்படுத்துமாறும் இக் குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த நிலையில், மீள் குடியேற்றம் செய்யப்பட்ட இத்தாவில், முகமாலைப் பகுதிகளில் உள் வீதிகள் புனரமைக்கப்படாததன் காரணமாக போக்குவரத்து செய்வதில் மக்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

மிதிவெடிகள் அகற்றப்பட்டு இத்தாவிலின் ஏனைய பகுதிகளில் மீள் குடியேற்றம் இடம்பெற்றிருந்தாலும் வீதிகள் சேதடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன.   அவ் வீதிகளையும் மக்கள் குடியமர்ந்த பகுதிகளில் புனரமைத்துத் தருமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You might also like