அதிவேகப் பாதையில் பற்றி எரிந்த ஆடம்பர கார்
தெற்கு அதிவேகப் பாதையில் பயணித்த ஆடம்பர கார் ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் நேற்றிரவு வேளையில் நடந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
19 வயது இளைஞர் ஒருவரால் ஓட்டிச் செல்லப்பட்ட ஆடம்பர கார் ஒன்றே இவ்வாறு தீப்பிடித்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
கார் தீப்பிடித்ததை அறிந்ததும் குறித்த இளைஞர் காரை விட்டு வெளியேறியதால் காயங்கள் இன்றி தப்பித்துக்கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.