52 வயது பெண்ணும் 34 வயது ஆண்ணும் தூக்கிட்டு தற்கொலை

இரு வேறு பிரதேசங்களில் இரண்டு பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளவர்களில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் அடங்குவதாக தெரிவித்த பொலிஸார் தற்கொலைக்கான காரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி உகனை – சமன்கல பிரதேசத்தில் இன்று காலை 34 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பானமுர – கிரிமெடிகொடல்ல பிரதேசத்தில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட பெண் 52 வயதுடையவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் குறித்த சம்பவங்கள் தொடர்பில் பானமுர பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like