கொழும்பிற்கு கடத்தப்பட்ட கேரள கஞ்சா கிளிநொச்சிப் பொலிசாரால் மீட்பு
யாழில் இருந்து கொழும்பிற்கு சென்று கொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்து சபைக்குரிய பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட சுமார் இரண்டு கிலோ கேரள கஞ்சா கிளிநொச்சிப் பொலிசாரால் இன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பேருந்தில் கேரள கஞ்சா கொண்டு செல்லப்படுவதாக கிளிநொச்சிப் பொலிசாருக்கு வழங்கப்பட்ட இரகசியத்தகவலுக்கமைய, கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்திற்கு முன்பதாக கிளிநொச்சி பொலிஸ் நிலைய மதுவோளிப்புப் பிரிவினரால் குறித்த பேருந்து வழிமறிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.
இதன்போது இரண்டு கிலோ கேரளா கஞ்சாவுடன் யாழ்ப்பாணம் அச்சுவேலியைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்
மேலதிக விசாரணைகள் கிளிநொச்சிப் பொலிசார் மேற்கொண்டு வருவதுடன், நாளை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இரண்டு சந்தேக நபர்களையும் ஆஜர்ப்படுத்த உள்ளனர்.
https://youtu.be/XQRyhKpDwLU