அதிகாரிக்கு சப்பாத்து பட்டியை கட்டும் பொலிஸ் உத்தியோகஸ்தர் – சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படம்

பொலிஸ் திணைக்களத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பதவியில் இருக்கும் அதிகாரி, பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை பயன்படுத்தி தனது சப்பாத்து லேஸ் பட்டியை கட்டிக்கொள்ளும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை அடிப்படையாக கொண்டு பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. எனினும் உண்மையான கதை இதுவரை உறுதியாகவில்லை.

கீழ் மட்ட அதிகாரிகளின் ஆத்ம கௌரவத்தை பல உயர் அதிகாரிகள் எண்ணிப் பார்ப்பதில்லை. கீழ் மட்ட அதிகாரிகளை பயன்படுத்தியே அவர்கள் தமது தனிப்பட்ட வேலைகளை கூட செய்து கொள்கின்றனர்.

எவ்வாறாயினும் புகைப்படத்தில் இருக்கும் அதிகாரி கீழே குனிய முடியாத நோயினால் பாதிக்கப்பட்டிருக்கலாம். எது எப்படி இருந்த போதிலும் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் புதிய வாத விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

You might also like