பிரதி அதிபரின் கைவிரலை உடைத்த மாணவன்..

கையில் அணியப்பட்டிருந்த காப்பு தொடர்பாக விசாரித்த பின்னவல தேசிய பாடசாலையின் பிரதி அதிபரின் கைவிரலை உடைத்த அந்த பாடசாலையின் 13 ஆம் தர மாணவர் தொடர்பில் எமது செய்தி பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளது.

பின்னர் கேகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதி அதிபருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதி அதிபரை தாக்கிய குறித்த மாணவன் இதற்கு முன்னரும் ஒழுக்காற்றை மீறியமை காரணமாக 14 நாட்கள் வகுப்பு தடைக்கு உள்ளானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ரம்புக்கன வலய கல்வி காரியாலயத்துடன், காவற்துறையும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

You might also like