வவுனியா சின்னப்பூவரசங்குளம் மகாவித்தியாலயத்தில் 21 வருடங்களுக்குப் பின்னர் சாதனை படைத்த மாணவி!!

வவுனியா சின்னப்பூவரசங்குளம் மகாவித்தியாலயத்தில் 21 வருடங்களுக்கு பின்னர் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவி ஒருவர் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளார்.

செல்வி ஜூவரட்ணம் ஆரணி தனது விடா முயற்சியினாலும் பாடசாலை அதிபர் திரு செல்வதேவன் அவர்களின் வழிகாட்டலினாலும் ஆசிரியை செல்வி சிவலிங்கம் சிந்துஜா அவர்களின் அயராத கடும் உழைப்பினாலும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்துள்ளார்.

குறித்த மாணவி எந்த ஒரு மேலதிக வகுப்புகளுக்கும் செல்லாமல் பாடசாலை ஆசிரியரிடம் மட்டுமே பாடங்களை கற்றார் என்பதோடு குறித்த ஆசிரியை கல்வியியல் கல்லூரியில் இருந்து பயிற்சி பெற்று தனது சேவையை ஆரம்பித்த முதல் வகுப்பு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like