தமிழ் பேசும் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் 31ம் திகதிக்கு முன்பதாக விண்ணப்பிக்கவும்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வரோட் அமையம் சமூகத்திற்கிடையிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடாத்தும் கட்டுரை போட்டியோன்றினை நடத்தவுள்ளனர்.

இவ் கட்டுரைப்போட்டியில் பாடசாலை மட்டத்திலிருந்து தரம் 10 – 13 மாணவர்கள் , ஆர்வமுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பங்குபற்றலாம் அத்துடன் தெரிவு செய்யப்பட்ட சிறந்த கட்டுரை பத்திரிகை மற்றும் இணையத்தளங்களில் பிரசுரிக்கப்படும்.

பாடசாலை மட்டத்தில் பங்குபற்றும் போட்டியாளர்கள் தமது விண்ணப்பப்படடிவத்தில் பாடசாலை அதிபரின் கையொப்பத்துடனும் ஏனையவர்கள் கிராமசேவையாளர் அல்லது மதகுருமாரின் கையொப்பத்துடன் நிறைவேற்று இயக்குனர்,VAROD 4ம் கட்டை, மன்னர் வீதி, பம்பைமடு, வவுனியா எனும் முகவரிக்கு அணுப்பி வைக்குமாறு வரோட் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

போட்டி தொடர்பான மேலதிக விபரங்கள் கிழே இணைக்கப்பட்டுள்ளதுடன் விண்ணப்படிவங்கள் மற்றும் மேலதிக தகவல்களுக்கு கீழேயுள்ள தொலைபேசியிலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளவும்

தொலைபேசி இலக்கம்:-

அருட்தந்தை கிறிஸ்டி ஜோன் CMF  – 0772207346

கஜேந்திரன் –  0772363532 

விக்டர் –  0776330480

You might also like