2 மாத குழந்தையை விற்க முயன்ற இலங்கைப் பெண்ணுக்கு மூன்று வருட சிறை!

ஐக்கிய அரபு அமீரகத்தில் தன் குழந்தையை விற்க முயன்ற இலஙகைப் பெண் ஒருவருக்கு மூன்று வருட சிறைத் தண்டனை வழங்கப்ட்டுள்ளது என Khaleej Times செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த இரண்டு மாத குழந்தையை வளர்க்க முடியாமலேயே அவர் 10,000 டேர்ஹாமிற்கு விற்பனை செய்ய முயற்சித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் பணிப் பெண்ணாகச் சென்ற இலங்கைப் பெண்ணே இந்த குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார் என்றும், முதலாளியிடம் இருந்து தப்பி வந்து தகாத முறையில் குழந்தைப் பெற்றுள்ளார்.

பல்வேறு நபர்களுடன் அந்தப் பெண்ணுக்கு தொடர்பு உள்ளதாகவும், அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குழந்தையை விற்பனை செய்வதற்கு உதவிய ஏனைய மூவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண்ணை கர்ப்பமாக்கிய நபர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார். எனவே குறித்த பெண் தன் குழந்தையை விற்க முயற்சித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சம்பவத்துடன் மற்றுமொரு இலங்கை பணிப் பெண்ணும் தொடர்புப்பட்டுள்ளார்.

குழந்தையை விற்பனை செய்ய முயற்சித்த இலங்கைப் பெண், தனக்கு உதவுமாறு மற்றைய பெண்ணிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தாய் நாட்டில் தாதியாக பணியாற்றியதால் இவருக்கு உதவ முயற்சித்தேன்.

இரண்டு மாதங்களுக்கு பின்னர்,அவர் தனக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு, குழந்தையை பராமரிக்க என்னால் முடியாது. அதிக செலவாகும் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையிலேயே குழந்தையை விற்பனை செய்ய தானும் முயற்சித்தாக அவர் கூறியுள்ளார். எனவே குழந்தையை விற்க முயற்சித்த பெண்ணையும், அதற்கு உதவிய ஏனைய இருவருக்கும் மூன்று வருட சிறைத் தண்டனை வழங்கி அபுதாபி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எவ்வாறாயினும், தான் குழந்தையை விற்க முயற்சிக்கவில்லை, குழந்தையை பராமரிக்க வளர்ப்பு தாயையே தேடினேன் என குழந்தையின் தாய் நேற்றைய தினம் மேன்முறையீடு செய்துள்ளார்.

இந்ந வழக்கு மீண்டும் இந்த மாதம் 29ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதவான் தெரிவித்துள்ளார்.

You might also like