கிளிநொச்சியில் 25 ஆவது நாளாகவும் தொடரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 25வது நாளாக தீர்வின்றி தொடர்கின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை இவ்வாறு தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

சில வேளைகளில் தங்களின் போராட்டத்தின் வடிவத்தினை மாற்றி எதிர்வரும் நாட்களில் போராட வேண்டி வரும் எனவும் கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி கலாரஞ்சனி தெரிவித்துள்ளார்.

இதேவேளை இப்போராட்டம் கடந்த 20-02-2017 அன்று காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like