வயது முதிர்ந்த மூதாட்டியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்தவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிப்பு

வயது முதிர்ந்த  மூதாட்டியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயற்சித்த மதுபோதையிலிருந்த நபரொருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஹாலி-எல பகுதியைச் சேர்ந்த உனுகொல்லை பெருந்தோட்டக் குடியிருப்பில் இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த தோட்டத்தைச் சேர்ந்த 32 வயது நிரம்பிய பெருமாள் சிவஞானம் என்ற சந்தேகநபரே பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டவராவார்.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

பூப்புனித நீராட்டு விழா நிகழ்வையொட்டி, குறிப்பிட்ட தோட்டக் குடியிருப்புத் தொகுதியில் விருந்துபசாரம் இடம்பெற்றுள்ளது. இவ் விருந்துபசாரத்தின் போது மதுபான வகைகளும் பயன்படுத்தப்பட்டன.

மதுபானம் அருந்தியவர்களில் ஒருவர் மதுபோதையில் 72 வயது நிரம்பிய மூதாட்டியை அறைக்குள் இழுத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோத்திற்குட்படுத்த முயற்சித்துள்ளார்.

அவ்வேளையில் மூதாட்டி எழுப்பிய கூக்குரலினால் அங்கு கூடியவர்கள் பாலியல்  துஷ்பிரயோத்திற்குட்படுத்த முயற்சித்த நபரைப் பிடித்து, பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் தாம்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, மதுபோதையில் மூதாட்டியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயற்சித்தவர் மதுப் பழக்கமற்றவரென்றும் முதன்முதலாக அன்றைய தினமே மதுபானத்தை அருந்தியவரென்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like