மோட்டார் வாகன விபத்து: 17 வயது இளைஞன் பலி
கொழும்பு-அவிசாவளை வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 17 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.
இளைஞர் பயணித்த மோட்டார் வாகனம், ஜீப் வண்டியுடன் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை,தம்புள்ளை-குருணாகல் வீதியில் உள்ள பங்கொல சந்தியில் பாதையை கடக்கும் போது வேன் ஒன்று மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்து்ளார்.
விபத்தினை தொடர்ந்து, வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.