சத்தமாக பாடல் ஒலிபரப்பிய வாகனச் சாரதி நீதிமன்றில் : யாழில் சம்பவம்

நீதிமன்ற நடவடிக்கைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பாடல் ஒலிபரப்பிய வாகன சாரதியை பொலிஸார் நீதிமன்றுக்கு அழைத்துச் சென்ற. இந்தச் சம்பவம் நேற்று சாவகச்சேரிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சாவகச்சேரி பொதுச் சந்தையில் குளிர் பானப் பொருட்கள்( ஐஸ்கிறீம் ) விற்பனை செய்யம் வாகனம் பாடலை சத்தமாக ஒலிபரப்பி வியாபாரத்தில் ஈடுபட்டடுள்ளது.

இச் சத்தம் அருகில் உள்ள நீதிமன்றில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் அவற்றுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் காணப்பட்டதால்  வாகனச் சாரதியை அழைத்து வருமாறு நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, நீதிவானின் உத்தரவுப் பிரகாரம் பொலிஸார்  குறித்த வாகனத்தின் சாரதியை நீதிமன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர் .

You might also like