இவர் பிச்சை எடுப்பவர் அல்ல…ஆனால்- மனதை உருக்கும் உண்மை சம்பவம்

அது ஒரு பெரு நகரம், அங்கு இருக்கும் சாலையில் ஒரு வயதான பெண் படுத்திருக்கிறார்.
இரவு தூங்கிவிட்டு காலையில் கண்விழித்து பார்க்கும் போது தினமும் அவர் அருகில் சில்லறைகளும், ரூபாய் நோட்டுக்களும் இருக்கும்.
அவர் பிச்சை எடுக்கவில்லை. ஆனால் சாலையிலேயே வாழ்வதால் பிச்சை எடுப்பவர் என அவரை நினைத்து மக்கள் பணம் போடுகிறார்கள்.
பின்னர் ஏன் முதிய பெண்மணி சாலையில் படுத்துள்ளார்? அவரே சொல்கிறார் கேளுங்கள்.
நான் என் மகனுடன் என் ஊரிலிருந்து கண் சிகிச்சை பெறுவதற்காக இந்த நகருக்கு வந்தேன்.
என் அன்பு பேரனும் உடன் வந்தான். நீங்கள் திரும்ப எங்களுடன் ஊருக்கு வர மாட்டீர்கள் என அவன் சொன்னான்.
நான் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. பின்னர் என் மகன் என்னை ரயில் நிலையத்தில் உட்கார வைத்து விட்டு இதோ வந்து விடுகிறேன் என கூறி என் பேரனுடன் சென்றான்.
ஆனால் அவன் பின்னர் வரவேயில்லை. பின்னர் தான், நான் தேவையில்லை என அவன் என்னை விட்டு சென்றது எனக்கு புரிந்தது.
என்றாவது அவன் வருவான் என எதிர்ப்பார்த்து கொண்டிருக்கிறேன். ஆனால் அது நடப்பது போல தெரியவில்லை.
சொல்ல முடியாத துன்பத்தில் நான் வாழ்ந்து வருகிறேன். எனக்கு தற்போது தேவை அமைதி, அன்பு, ஓய்வு தான்.
பரவாயில்லை, எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு இருக்கும் தானே. அது போல என் முடிவுக்காக காத்திருக்கிறேன் என அமைதியுடன் முடிக்கிறார் முதிய பெண்மணி