மரண அறிவித்தல் – அமரர் பிரான்சிஸ் மரிய அருமைநாயகம் (இராசநாயகம்)

அமரர் பிரான்சிஸ் மரிய அருமைநாயகம் (இராசநாயகம்)

தாய்மடியில்:02.03.1930              இறைமடியில்:11-10-2018

‘நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன்

என் ஓட்டத்தையும் முடித்து விட்டேன்.

விசுவாசத்தை காத்துக்கொண்டேன்’

கரம்பொன் ஊர்காவற்துறையை பிறப்பிடமாகவும் சூராவத்தை சுன்னாகம் மற்றும் கனடாவையும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் பிரான்சிஸ் மரிய அருமைநாயகம் (இராசநாயகம்) அவர்கள் கடந்த வியாழக்கிழமை (11-10-2018) அன்று அச்சுவேலி தென்மூலையில் வசிக்கும் மூத்த மகளாகிய ராஜினி அவர்களின் வீட்டில் இறைபதம் அடைந்தார்.

அமரர் திரு.பிரான்சிஸ் வில்லியம் , அமரர் திருமதி. கிறிஸ்ரினா பிள்ளை ஆகியோரின் பாசமிகு மூத்த புதல்வனும் திருமதி யோசப்பின் இராசாத்தி அவர்களின் அன்புமிகு கணவரும் ராஐினி , அருட்சகோதரி ரஞ்சினி (ஏழைகளின் சிறிய சகோதரி-அமெரிக்கா) , அன்ரன் , யக்குலின், டிக்சன் , இராசகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும் சாள்ஸ் மத்தியூஸ் , பிரபா, சேகர் , தர்மினி ஆகியோரின் மாமனாரும் கிளாரா(மணி-கனடா) , இறைபதம் அடைந்த யோசுதாசன் , அன்ரனி , இராயேஸ்வரி ஆகியோரின் அன்பும் பாசமும் மிகுந்த சகோதரனும் எட்மென் ராஜ் , அருட்சகோதரன் டெஸ்மென் ராஜ் CMF , நிக்ஸ்மென் ராஜ் , ஆன்லக்சினி , ஆன்யன்சினி , நன்சி , நிறோசன் , ஜொனி , அக்சியா , அனிற்ரன் , அஸ்வினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் 14-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரின் வசிப்பிடமான சூராவத்தை சுன்னாகம் வீட்டிற்கு 8.30 மணியாளவில் எடுத்து செல்லப்பட்டு 15-10-2018 திங்கட்கிழமை காலை 9.00மணியாளவில் சூராவத்தை ‘புனித திரேசம்மாள்’ ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு ஏழாலை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

  • தகவல் 

மனைவி , பிள்ளைகள் , சகோதரர்கள் , மருமக்கள் ,பேரப்பிள்ளைகள்

  • தொடர்புகளுக்கு

ராஐினி-அச்சுவேலி 0777041362

அன்ரன்-கனடா 0014164528704

எட்மென்ராஐா 0776919138

  • முகவரி: 

சாள்ஸ் மத்தியூஸ் கைத்தொழிற்பேட்டை வீதி , அச்சுவேலி ,  யாழ்ப்பாணம்

You might also like