அழிவின் விளிம்பில் சிங்கராஜா வனம்: கோரிக்கையை நிறைவேற்றுமா அரசு

இரத்தினபுரி மாவட்டத்தின் இயற்கை அழகை கொண்ட சிங்கராஜா வனம் அழிவடையும் ஆபத்தை நோக்கி செல்வதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த வனப்பகுதிகளில் தேயிலை பயிர் செய்கையை மேற்கொள்வதற்கு சிலர் காட்டுபகுதியை அழித்து வருவதாகவும் நாளடைவில் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுவிடும் எனவும் கூறப்படுகின்றது.

அத்துடன், வனப்பகுதியில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு இரசாயன பதார்த்தம் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் இதனால் செழிப்பாக வளர்ந்திருக்கும் ஏனைய மரங்கள் காய்ந்து போவதாகவும் மக்கள் கருத்து குறிப்பிடுகின்றது.

இததேவளை, காடழிப்பினால் பல பகுதிகளில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன் ஆறுகளும் வற்றிபோயுள்ளதாக பிரதேச மக்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மேலும், இவ்வாறான நிலைமை தொடர்ந்து சென்றால் சிங்கராஜா வனம் கடுமையான வறட்சியை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளதுடன் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You might also like