உலக நாடுகளுக்கான நிதியை அதிரடியாக குறைக்கும் ட்ரம்ப்! இலங்கையையும் பாதிக்குமா?

அமெரிக்காவில் ஒபாமா நிர்வாகத்தின் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளது.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டொனால்டு டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் தன்னுடைய முதல் பட்ஜெட்டில் வெளி நாடுகளுக்கான நிதியுதவியை பெருமளவில் டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

20 சதவீதம் வரை நிதியுதவியை குறைக்க முடிவு செய்திருப்பதால், பாகிஸ்தான் அதிகம் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு நிதியாண்டில் வெளி நாடுகளுக்கு நிதி வழங்குவதற்காக அமெரிக்கா 40 பில்லியன் டாலர்களை செலவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிதியில் 60 சதவிகிதத்தை பொருளாதாரம், முன்னேற்றம் ஆகியவற்றுக்கும் 40 சதவிகிதத்தை பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அமெரிக்கா வழங்கும் என ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா அதிக அளவில் நிதியுதவி வழங்கி வரும் பட்டியலில் ஆப்கானிஸ்தான், ஈராக், கென்யா, நைஜீரியா, தான்சானியா, பாகிஸ்தான், எத்தியோப்பியா, பாகிஸ்தான், இஸ்ரேல், எகிப்து, மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் உள்ளடங்கியுள்ளது.

இந்த அறிவிப்பானது இலங்கை பொருளாதாரத்தில் பாரியளவு மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது இலங்கை மக்கள் மத்தியில் எழும் கேள்வியாக உள்ளது.

இதேவேளை, டிரம்ப் தனது பிரச்சாரத்தின்போது, வெளிநாடுகளுக்கு பணத்தை செலவு செய்வதை குறைத்துவிட்டு நாட்டிற்கு அதிகமாக செலவு செய்ய விரும்புவதாக கூறியுள்ளார்.

எனவே, அதன் அடிப்படையில் அவரது முதல் பட்ஜெட் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like