வவுனியாவில் வர்த்தக நிலையம் உடைந்து திருட்டு (படங்கள் இணைப்பு)

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள வர்த்த நிலையமொன்றில் இன்று (17.03.2017) அதிகாலை  திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள மருந்தக விற்பனை நிலையத்தினை இன்று (17.03.2017) அதிகாலை  உடைத்து பணம் திருடப்பட்டுள்ளதாக உரிமையாளரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளரிடம் வினாவிய போது,

நேற்று (16.03.2017) இரவு 9.00மணியளவில் வழமை போன்று வர்த்தக நிலையத்தினை பூட்டி விட்டு சென்றதாகவும் இன்று (17.03.2017) காலை 7.00மணியளவில் வர்த்தக நிலையத்தினை திறந்த போது பின் பக்க வாயிலின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததாகவும்  பணம் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

You might also like