யாழில் ஒருவர் உயிரிழப்பு : இதுவரை 96 வழக்குகள் பதிவு

யாழில் டெங்கு நோய் தற்போது அதிகமாக பரவி வருகின்ற நிலையில் இவ்வருடம் 96 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய சுற்றுச்சுழல் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

யாழ்.குடாநாட்டின் பல்வேறு இடங்களில் தற்போது டெங்கு நோய்த் தாக்கம் அதிகமாகியுள்ளதாக சுற்றுச்சுழல் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அவற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது துரித கதியில் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறிருக்க இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து மார்ச் 16 ஆம் திகதி்க்குட்பட்ட காலப்பகுதிகளி்ல் மட்டும் 96 வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடத்தில் மட்டும் 390 வழக்கு யாழ் பொலிஸாரால் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வருடத்தின் ஆரம்ப பகுதியில் மட்டுமே 96 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யாழ் குடாநாட்டில் தற்போது டெங்கு தாக்கம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் 15 பொலிஸார், 15 விசேட அதிரடிப்படையினர், 15 இராணுவத்தினர், கிராம சேவையாளர்கள் பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள்,டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

மேலும், திருகோணமலை மாவட்டத்தில் மட்டும் 23 மணித்தியாலத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் நோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like