தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு

வவுனியா மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகமான தாயத்தில் கட்சியின் கிளைத்தலைவர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே தெரிவு நடைபெற்றது.

இளைஞர் அணியின் மாவட்ட தலைவராக செல்வன் பாலச்சந்திரன் சிந்துஜனும், செயலாளராக செல்வன் ஜெயராசா விதுசனும், உப தலைவராக செல்வன் ச.பத்மசீலனும், உப செயலாளராக செல்வன் சிவகுரு பகீரதனும் தெரிவு செய்யப்பட்டனர்.

அத்துடன் மாவட்டத்தின் சகல உள்ளுர் அதிகாரசபை பிரதேசங்களையும் பிரதிநித்துவப்படுத்தும் வகையில் 21 நிர்வாக உறுப்பினர்கள் அடங்கலாக 25 உறுப்பினர்களைக் கொண்ட புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.முத்துராசா, மாவட்ட அமைப்பாளர் ந.கருணாநிதி உட்பட கட்சியின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like