வவுனியாவில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட 12பயணாளிகளுக்கு நாற்சக்கரக்காலி வழங்கிவைப்பு

வவுனியா பம்பைமடு வைகறை முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட வைத்தியசாலையில் மருத்துவப்புனர்வாழ்வு பெற்ற 12பயணாளிகளுக்கு இன்று (17.03.2017) காலை 9.30மணியளவில் வைகறை வைத்தியசாலையில் வைத்து வடமாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப. சத்தியலிங்கத்தினால் நாற்சக்கரக்காலி வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கு. அகிலேந்திரன், வைத்தியசாலையின் மேற்தர தாதிய உத்தியோகத்தர், வைகறை நிர்வாக உத்தியோகதத்ர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.

மோட்டிவேசன் ஸ்ரீலங்கா, வடமாகாண சுகாதார அமைச்சு இணைந்து இவ்வருடத்தில் வடமாகாணத்தில் மருத்துவப் பனர்வாழ்வு பெற்ற பயணாளிகளுக்கு 110நாற்சக்கரக்காலிகளை வழங்கிவைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like