வவுனியா நகரசபை செயலாளரின் அசமாந்தபோக்கு : சம்பவ இடத்திற்கு விரைந்த மஸ்தான்

வவுனியா நகரசபை மைதானத்தில் முற்செடிகள் மற்றும் தொட்டாசினுங்கிச் செடிகள் காணப்படுவதாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினையடுத்து  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் இன்று (17.03.2017) சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.

வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள் கடந்த சில நாட்களாக நகரசபை மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இவ் விளையாட்டு மைதானம் விளையாடுவதற்கு உகந்த நிலையில் இல்லையேன ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து கடந்த 14.03.2017 (செவ்வாயக்கிழமை) துப்பரவாக்கிய பின்னரே விளையாட்டில் ஈடுபட்டனர்.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் இன்று (17.03.2017) காலை 11.30மணியளவில் மைதானத்தினை பார்வையிட்டதுடன் வவுனியா நகரசபை செயலாளருடனும் கலந்துரையாடினார்.

மைதான வாடகையாக ஒருநாளுக்கு ஆயிரத்து 750 ரூபாவும், சுத்தமாக்குவதற்கு என இரண்டாயிரம் ரூபாயும் நகரசபையால் அறவிடப்படுகின்றது. ஆனால் அதற்கு ஏற்ற வகையிலான மைதானம் சீராக இல்லை என பலரும் குற்றம்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like