6 வயது சிறுமி பரிதாப மரணம் : சோகத்தில் அப்பகுதி மக்கள்

திருகோணமலையில் டெங்கு நோய் தாக்கத்தினால் 6 வயது மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது கிழக்கு மாகாணத்தில் அதிகளவிலானவர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இதில் சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் பயிலும் உதயராஜன் அஞ்சனா வயது – 6 என்ற சிறுமியே நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

கடந்த 13ஆம் திகதி அன்று காய்ச்சல் காரணமாக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி நேற்றிரவு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் நேற்று முன்தினத்தில் இருந்து 23 மணிநேரத்தில் 50 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You might also like