எதிர்ப்பார்ப்போடு தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்

கிளிநொச்சி, பன்னங்கண்டி மக்களின் போராட்டம் 14 ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது.

காணி அனுமதி பத்திரம் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோரி பன்னங்கண்டி கிராம மக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

போராட்டம் தொடர்ந்து வரும் இந்த நிலையில், அண்மையில் குறித்த காணி உரிமையாளரின் உறவினர் ஒருவர் இது தொடர்பில் நேரில் சென்று மக்களின் நிலைமைகளை பார்வையிட்டுள்ளார்.

இதன்போது தமது உறவினர்களுடன் பேசி சாதகமான முடிவைத் தருவதாக கூறிச்சென்றுள்ளார்.

இருப்பினும் தமக்கு சாதகமான முடிவு வரும் வரையில் போராட்டம் தொடரும் எனவும் தமக்கு சாதகமான பதிலை காணி உரிமையாளர் தருவார் என நம்பியவாறு இருப்பதாகவும் போராட்டகாரர்கள் போராட்டத்தினை தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like