வவுனியாவில் சுகவீனமுற்ற எட்டு பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!!

வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் சிவானந்தா வித்தியாலயத்தின் பாடசாலை மாணவர்கள் எட்டுப்பேர் சுகவீனம் காரணமாக நேற்று (16-03-2017) செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மெனிக்பாம் சிவானந்தா வித்தியாலயத்தில் ஆறாம் ஆண்டில் கல்வி கற்கும் எட்டு மாணவர்கள் சுகவீனமுற்ற நிலையில் பாடசாலை அதிபரின் அழைப்பின் பேரில் செட்டிக்குளம் வைத்தியசாலையிலிருந்து சென்ற அம்புலன்ஸ் வண்டி மாணவர்களை வைத்தியசாலையில் சேர்த்திருந்ததுடன் மாணவர்களுக்கு சிகிச்சை மேற்கொண்டிருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக செட்டிக்குளம் வைத்தியசாலையுடன் தொடர்பு கொண்டபோது

நேற்றையதினம் ஒரு மாணவன் மற்றும் ஏழு மாணவிகள் உட்பட எட்டு பாடசாலை மாணவர்கள் திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய பாடசாலையிலிருந்து அம்புலன்ஸ் வண்டி மூலம் அழைத்துவரப்படட மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தலைசுற்று மற்றும் ஒவ்வாமை காரணமாகவே மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் சுமார் ஒரு மணிநேர சிகிச்சையின் பின் மாணவர்கள் பாடசாலை திரும்பியதாக வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

இச்சம்பவத்தின் காரணமாக பாடசாலை அதிபரால் நண்பகல் 12.00 மணியளவில் பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

You might also like