பொலிஸ் உத்தியோகத்தர் மீது பஸ் சாரதியும் நடத்துனரும் கடும் தாக்குதல்!
கல்கமுவ அம்பன்பொல பிரதேசத்தில் பேருந்து ஊழியர்கள் இருவர் நடத்திய தாக்குதலில் பொலிஸ் உத்தியோகஸ்தர் காயமடைந்துள்ளார்.
வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்தின் சாரதியும் உதவியாளரும் பொலிஸ் உத்தியோகஸ்தரை தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் சிகிச்சைக்காக கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட பிரச்சினை இந்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணம் என தகவல் கிடைத்துள்ளதாகவும் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய விசாரணைகளை நடத்தி வருவதாகவும் அம்பன்பொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.