யாழ். மானிப்பாயில் இளைஞர் ஒருவர் கைது : வாள் ஒன்றும் மீட்பு

யாழ். மானிப்பாய் பகுதியில் இளைஞர் ஒருவர் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞரை நேற்று இரவு யாழ். பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 19 வயதுடைய ஒருவர் எனவும், குறித்த நபர் கைது செய்யப்பட்ட போது அவரது வீட்டில் இருந்து வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளார்.

இதேவேளை, கடந்த காலங்களில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவான வாள்வெட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like