கட்டாக்காலி மாடுகளினால் கிளிநொச்சி ஏ9 வீதியில் போக்குவரத்து பாதிப்பு

கிளிநொச்சி ஏ9 வீதியில் கட்டாக்காலி மாடுகள் காணப்படுவதால் போக்குவரத்தில் பாரிய சிரமங்களை எதிர்கொள்வதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி நகரம் இரவு நேரங்களில் அழகுடன் காணப்படுகின்ற போதிலும், கட்டாக்காலி மாடுகள் குறித்த நகரின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பிரதான வீதியில் காணப்படும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துமாறு பிரதேச சபையினரிடம் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் எவ்வித முன்னேற்றமும் இல்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் விபத்துக்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கும் மக்கள், குறித்த கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.

You might also like