வவுனியாவில் வீதிகளில் கட்டாக்காலி கால்நடை : விபத்துக்கள் அதிகரிப்பு

வவுனியாவில் பிரதான வீதிகளில் நிற்கும் கட்டாக்காலி மாடுகளால் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கால்நடை வளர்ப்பாளர்கள் தமது கால்நடைகளை வீடுகளில் கட்டி வைத்திராமல் வீதிகளில் விடுவதனால் அவை இரவு நேரங்களில் வீதிகளில் திரிவதுடன் இவற்றினால் அதிகமான விபத்துக்களும் இடம்பெறுகின்றன.

இதேவேளை கட்டாக்காலி மாடுகள் வயல் வெளிகளுக்கு சென்று விவசாய நிலங்களில் சேதம் விளைவிப்பதாகவும் தாம் பெரும் நஸ்டம் அடைவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

முன்னாள் நகரசபை செயலாளர் காலத்தில் இவ்வாறான கட்டாக்காலி மாடுகளை வவுனியா நகரசபையினர் பிடித்து அவற்றின் உரிமையாளர்களிடம் தண்டம் அறிவிட்டபேதிலும் புதிய செயலாளரின் வருகையின் பின்னர் அந்நடவடிக்ககையினை தொடர்ச்சியாக மேற்கொள்ளாமையினால் கட்டாக்காலி மாடுகள் அதிகமாக காணப்படுவதாக மக்கள் மேலும் கவலை தெரிவித்தனர்.

You might also like