வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாகப்கொப்பிகள் வழங்கி வைப்பு

வவுனியாவில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாகப்கொப்பிகள் வழங்கும் நிகழ்வு இன்று (20.10.2018) மதியம் 12.30 மணியளவில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வவுனியா காரியாலயத்தில் இடம்பெற்றது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் சர்வதேச கிளைகளின் நிதி ஒதுக்கிட்டில் வவுனியா தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட 60 பாடசாலை மாணவர்களுக்கு (ஒருவருக்கு ரூபா 1000.00 பெறுமதியான அப்பியாகப்கொப்பிகள்) வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், வவுனியா தெற்கு பிரதேச சபையின் தலைவர் து. நடராஜசிங்கம், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயுரன் மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள், அம்மா அறக்கட்டளையின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாகப்கொப்பிகள் வழங்கி வைத்தனர்.

You might also like