வரவு செலவு கூட்டத்தொடரில் நாங்கள் எடுக்கின்ற முடிவு எங்களுடைய மக்கள் படுகின்ற துன்பங்களுக்கு பதில் சொல்லும் : அடைக்கலநாதன்

வவுனியா ஆச்சிபுரத்தில் வசித்து வரும் ஏழை குடும்பத்திற்கு இன்று பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனால் வீடு ஒன்று கையளிக்கப்பட்ட பின்னர் வரவு செலவுத் திட்டம் தொடர்பாக உங்களது நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட போதே செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

வரவு செலவுத்திட்டம் என்பதற்கு அப்பால் பார்த்தோமாக இருந்தால் எங்களுடைய மக்களுடைய நிறைய பிரச்சினைகள் இருக்கின்றது.

அதைவிட இன்றைய மக்களுடைய அன்றாட தேவைகள் என்று சொல்லி பார்க்கும்போது விலைவாசிகள் மிகவும் அதிகமாக இருக்கின்றது.

அதைவிட இன்று பல பிரச்சினைகள் இருக்கின்றது. அரசியல் கைதிகளுடைய பிரச்சினை இன்றைக்கு சூடுபிடித்து இருந்தாலும் கூட நிலத்துக்காக போராடுகின்ற மக்கள் இருக்கின்றார்கள், காணாமல் போனவர்களுடைய பிரச்சினை இருக்கின்றது இப்படியாக பல பிரச்சினைகள் இருக்கின்றது.

எங்களைப் பொறுத்தமட்டில் எங்களுடைய மாநாட்டிலேயே நாங்கள் கூறியிருக்கின்றோம் இந்த வருட இறுதிக்குள் ஒரு கால எல்லையை கொடுக்கபட வேண்டும் என்பதனை நாங்கள் சொல்லியிருக்கின்றோம்.

எங்களைப் பொறுத்தமட்டில் ஜனாதிபதியை சந்தித்து அரசியல் கைதிகள் சம்பந்தமாக பேசுகின்றபோது அவர் ஒரு திகதியை வழங்குவதாகவும் எல்லாரையும் அழைத்து பிரதமர், சட்டமா அதிபர் உட்பட அனைவரையும் அழைத்து இவ் விடயம் சம்பந்தமாக ஆராய போவதாகவும் கூறுயிருக்கின்றார்.

இருந்தாலும் எங்களைப் பொறுத்தமட்டில் இந்த விடயத்திலேயே நாங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதிலே தமிழீழ விடுதலை இயக்கம் ஆணித்தரமாக இருக்கின்றது.

வருகின்ற வரவு செலவு கூட்டத்தொடரில் நாங்கள் எடுக்கின்ற முடிவு எங்களுடைய மக்கள் படுகின்ற துன்பங்களுக்கு எங்களுடைய இந்த அன்றாட பிரச்சினைகளுக்கும் இந்த அரசாங்கம் அரசியல் தீர்வையும் ஏமாற்றக்கூடிய வகையிலே செயற்படுகிறது என்பதை சர்வதேசத்துக்கு நியாயப்படுத்துகின்ற வகையிலும் இந்த ஆண்டு ஒரு முக்கியமான ஒரு ஆண்டாக இருக்கும் என்பதை கூறிக்கொள்வதாக மேலும் கூறியிருந்தார்.

You might also like