ஊழல் மோசடிக்காரர்கள் பட்டியலில் பிரதமர் ரணிலின் பெயர்.!

நுரைச்சோலை அனல் மின்நிலையத்திற்கான நிலக்கரி கொள்வனவு விலைமனுக்கோரலினூடாக அரசாங்கத்திற்கு 5 ஆயிரம் மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சி பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட அமைச்சர் மலிக் சமரவிக்ரம, பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ஆர். பாஸ்கரலிங்கம், குறித்த விலைமனுகோரல் தொடர்பில் நியமிக்கப்பட்ட செயலாளர் சுரேன் பட்டகொட ஆகியோர்களுக்கு எதிராக கூட்டு எதிர்கட்சி நேற்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தது.

அம்முறைப்பாட்டை பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க செய்திருந்தார்.

You might also like