இலங்கையில் இரகசிய சித்திரவதை கூடம் : படுமோசமான மீறல்கள் – சூகா

முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய இரகசிய சித்திரவதை கூடமொன்றை முன்னெடுத்துள்ளார். இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இராணுவ முகாமொன்றில் இந்த சித்திரவதைக் கூடம் காணப்பட்டதாக சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் யாஸ்மின் சூகா தெரிவித்துள்ளார்.

ஜகத் ஜயசூரிய வன்னிக் கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய காலத்திலேயே இவ்வாறு சித்திரவதைக் கூடமொன்றை முன்னெடுத்துள்ளார். 2007 ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இந்த முகாம் பேணப்பட்டு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சித்திரவதை முகாம் தொடர்பில் வெளியிட்டுள்ள விஷேட அறிக்கையிலேயே சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் யாஸ்மின் சூகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

You might also like