ஒட்டிசுட்டானில் கோர விபத்து: முன்னாள் போராளி மரணம்

ஒட்டிசுட்டான் சந்தியில் பிரதான வீதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் முன்னாள் போராளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரும் அவருடைய மகனும் காயமடைந்த நிலையில் நேற்று முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டதுடன் இன்று அவர் உயிரிழந்துள்ளார்.

ஒட்டிசுட்டன் சந்தியின் பிரதான வீதிக்கு ஏற முற்பட்ட மோட்டார் வாகனமும், பிரதான வீதியில் வந்துகொண்டிருந்த டிப்பர் வாகனமும் மோதிக்கொண்டதினால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் முன்னாள் போராளியும், வன்னி விழிப்புலன் அற்றோர் சங்கத்தின் முன்னாள் பொருளாளருமான குமாரசாமி நந்தகோபால் என்பவரே விபத்துக்குள்ளாகியுள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

You might also like