பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறியின் விலை வீழ்ச்சி
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறியின் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலையத்தில் அதிகளவு மரக்கறிகள் கிடைப்பதனால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரக்கறியின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக கூறியுள்ளனர்.
அத்துடன், கரட், லீக்ஸ், கத்தரிக்காய் ஆகிய ஏராளமான மரக்கறிகளின் மொத்த விலை 15 முதல் 30 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக பொருளாதார மத்திய நிலைய முகாமைத்துவம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மரக்கறி கொள்வனவாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் அந்த மரக்கறிகள் காட்டு யானைகளின் உணவிற்காக வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.