முதலாம் ஆண்டு மாணவரை பாடசாலைக்கு சேர்க்க பல லட்சம் ரூபாய் லஞ்சம்: சந்தேக நபர் விளக்கமறியல்

கொழும்பு – புனித பெனடிக் கல்லூரியின் பழைய மாணவர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த கல்லூரியில் முதலாம் ஆண்டுக்கு மாணவர் ஒருவரை சேர்ப்பதற்காக 650,000 ரூபாய் இலஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றசாட்டில் அந்த நபர் கைதுசெய்ப்பட்டுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் 30 ஆம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரொஸ்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், கடந்த காலங்களில் இந்த கல்லூரியில் கணித பாட ஆசிரியர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.