தனியார் வகுப்புக் சென்ற மாணவியை காணவில்லை: பொலிஸ் முறைப்பாடு

ஒரே வயதினை ஒத்த சிறுமிகள் இருவர் காணாமல் போயுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருநாகல் வாரிபொல மற்றும், காலி கரந்தெனிய பிரதேசதங்களைச் சேர்ந்த சிறுமிகளே காணாமல் போயுள்ளனர்.

இது குறித்து தெரியவருவதாவது,

காலி கரந்தெனிய பிரதேசத்தினைச் சேர்ந்த சிறுமி ஒருத்தியும், குருநாகல் வாரிபொல பிரதேசத்தினைச் சேர்ந்த சிறுமியும் கடந்த 11ம் திகதி காணாமல் போயுள்ளனர். இருவருக்கும் 14 வயது என்றும், முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் வகுப்பிற்கு செல்வதாக குறிப்பிட்டுவிட்டு சென்ற போதே மாணவி காணாமல் போயுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

You might also like