கிளிநொச்சிப் போராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழகம் ஆதரவு

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் 26 வது நாளாகவும் தொடர்கின்றநிலையில்

இன்று யாழ் பல்கலைகழக முகாமைத்துவப் பிரிவு மாணவர்கள் தமது ஆதரவை வழக்கும் முகமாக கந்தசுவாமி ஆலயம் முன்றலில் நடைபெறுகின்ற போராட்டத்தில் இணைந்து தமது ஆதரவினை வழங்கி உள்ளனர்.

அத்துடன் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிற்கான மகயர் ஒன்றினை கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி கலாரஞ்சனியிடம் கையளித்தனர்.

மேலும் இப்போராட்டத்திகு தீர்வு விரைவில் கிடைக்க வேண்டும் எனவும் தீர்வு கிடைக்கும் வரை தமது ஆதரவு இருக்கும் என மாணவர்கள் தெரிவித்தனர்.

You might also like