அர்ஜுன் மீது வைக்கப்பட்ட பாலியல் புகார்! மற்றொரு நடிகை வெளியிட்ட தகவல்

பிரபல நடிகர் அர்ஜுன் மீது வைக்கப்பட்ட பாலியல் புகார் குறித்து தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா தன்னுடைய கருத்தினை தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகர் அர்ஜுன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என, நிபுணன் பட நாயகி ஸ்ருதி ஹரிஹரன் மீ டூ வழியாக புகார் தெரிவித்தார்.

தமிழ் திரையுலம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த செய்திக்கு நடிகர் அர்ஜுன் மறுப்பு தெரிவித்தார். மேலும் அவருடைய மகள் ஐஸ்வர்யா, தந்தையின் பெயருக்கு களங்கம் விளைவிக்கவே இப்படி செய்கின்றனர் என தெரிவித்தார்.

இந்த நிலையில் அர்ஜுனுக்கு ஆதரவாக இளம் தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா கருத்து தெரிவித்துள்ளார். அதில், அர்ஜுன் சார் இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் 150-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். 100-க்கும் மேற்பட்ட கலைஞர்களுடன் பணியாற்றியுள்ளார்.

அவர் தென்னிந்தியாவின் முக்கியமான நடிகர். நிஜமாகவே ஒரு ஜென்டில்மேன். தூய்மையானவர்.

மக்கள் மத்தியில் நிரந்தரமாக இடம் பிடித்திருக்கிறார்.நான் நடித்து வரும் இப்படத்தில் அவ்வளவு நாகரீகமாகவும் ஒரு வழி காட்டியாகவும் இருக்கிறார். எந்த அமைப்பாக இருந்தாலும் அதை தவறாக பயன்படுத்தக் கூடாது என்பது என் கருத்து என்கிறார் சோனி செரிஸ்டா .

மேலும் அவர் மீது தவறான கருத்தை கூறுவது வருந்தத்தக்கது என கூறியுள்ளார்.

அர்ஜுன் நடிப்பில் தமிழில் உருவாகி வரும் “இருவர் ஒப்பந்தம்”.படத்தில் கன்னட, தெலுங்கு மொழிகளில் சோனி செரிஸ்டா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like