தனியார் துறையினரின் அடிப்படை சம்பளத்தை உயர்த்த கோரிக்கை!

தனியார் துறையினரின் ஆகக் குறைந்த அடிப்படை சம்பளத்தை 2500 ரூபாவாக அறிவிக்கும் வகையில் வரவு செலவு திட்டத்தில் யோசனைகளை உள்ளடக்குமாறு நிதி அமைச்சுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திர வர்த்தக மற்றும் பொது ஊழியர் சங்கமே இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. அரசாங்கத்தின் புள்ளி விபர அறிக்கைகளுக்கமைய 4 பேர் கொண்ட குடும்பமொன்றின் மாதாந்த செலவு 54,000ஐ தாண்டியுள்ளதாகவும் இதனால் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு ஏற்றால் போன்று தனியார் துறை ஊழியர்களின் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் அந்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

You might also like