இலங்கையின் அட்டூழியம் தொடர இதுதான் காரணமா?

இந்தியாவைப் பற்றிய பயம் இலங்கைக்கு இல்லாததுதான் காரணம்.

இந்திய மீனவர்களை சிங்களக் கடற்படை சுடுகிறது என்றால், இந்தியாவைப் பற்றிய பயம் அவர்களுக்கு இல்லை. தட்டிக் கேட்கும் துணிச்சலான தலைமை இந்தியாவில் இல்லை என்பதே இதற்குக் காரணம்.

இதைக் கேள்வி கேட்காத, முதுகெலும்பு இல்லாத பிரதமராக மன்மோகன் சிங் இருக்கிறார்’ என்று சென்னை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

மன்மோகன் சிங் ஆட்சி முடிந்து மோடியே பிரதமராக வந்துவிட்டார். ஆனாலும், கொலை நடக்கிறது.

இன்னொன்றையும் மோடி சொன்னார். ‘தமிழக மீனவர்களுக்கு இலங்கையால் பிரச்சினை. குஜராத் மீனவர்களுக்கு பாகிஸ்தானால் பிரச்சினை. இரண்டு மாநில மீனவர்களுக்கும் ஒரே பிரச்சினைதான். எனவே, ஒன்றுபட்ட தீர்வை சேர்ந்து எட்டுவோம்’ என்றும் சென்னையில் மோடி பேசினார்.

இவை எல்லாம் நடக்காமல் போனதன் விளைவுதான், கொலைகள் தொடர்கின்றன.

மன்மோகன் சிங்கிடம் முதுகெலும்பைத் தேடிய மோடி, தன்னிடம் அது இருக்கிறது என்று காட்ட வேண்டிய நேரம் இது என்பதை உணரவேண்டும்.

You might also like