இணையத்தளத்தில் பெண்களிடம் வரம்பு மீறிய நபர்: 11 ஆண்டுகள் சிறை விதித்த நீதிமன்றம்

டென்மார்க் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் இணையத்தளம் மூலமாக பல்வேறு நாடுகளை சேர்ந்த பெண்களிடம் வரம்பு மீறி செயல்பட்ட குற்றத்திற்காக அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

டென்மார்க் நாட்டை சேர்ந்த Ayden C(38) என்ற நபர் இணையத்தளம் மூலம் பிரித்தானியா, கனடா, நோர்வே, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த பெண்களிடம் நட்பு ஏற்படுத்திக்கொண்டு பழகி வந்துள்ளார்.

சில ஆண்டுகளாக இந்த நட்பு தொடர்ந்து நிலையில் நபர் மீது பெண்களுக்கு அதீத நம்பிக்கை ஏற்பட்ட அவர் கூறியதை போல் நடந்துக்கொண்டனர்.

ஒரு சில நாட்களில் இணையத்தள கமெரா மூலமாக ஒன்லைன் செக்ஸில் ஈடுப்படுமாறும் நபர் பெண்களிடம் கேட்டுள்ளார்.

இதற்கு சில பெண்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இதனை வாய்ப்பாக எடுத்துக்கொண்ட அந்த பெண்களிடம் அதே செயலில் அடிக்கடி ஈடுப்படுமாறு கேட்டுள்ளார்.

தனது விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால் அவர்களுடைய ஆபாச வீடியோக்களை பரப்பி விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதுபோன்று ஒரு சம்பவத்திற்கு உள்ளான கனடா நாட்டை சேர்ந்த 15 வயது சிறுமியான Amanda Todd என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

நபரின் கொடூரமான செயல்கள் வெளியே தெரிந்ததும் டென்மார்க் பொலிசார் அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மேலும், அவரது கணிணியை சோதனை செய்தபோது அதில் இருந்த ஏராளமான ஆபாச வீடியோக்களை பறிமுதல் செய்தனர். நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று இறுதி விசாரணை நீதிமன்றத்திற்கு வந்தபோது குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் 243 நாட்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

You might also like