வவுனியா வடக்கில் இடம்பெற்ற சமுர்த்தி ஊழல்  5 உத்தியோகத்தர் பதவி நீக்கம் : ஊழல் தடுக்கப்படுமா?

வடக்கில் இடம்பெற்ற இறுதியுத்தத்தின் போது வவுனியா வடக்கு பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்தனர். அவர்களது உறவுகளை யுத்தம் காவுகொண்டதுடன் அவர்களும் உடைமைகளும் சேதமடைந்தன .

இதன் பின்னர் வவுனியாவிக்கு இடம்பெயர்ந்த இவ் பிரதேச மக்கள் வவுனியாவில் அமைக்கப்பட்ட அகதி முகாமில் தங்கியிருந்தனர். யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் அப்பகுதிகளை அரசாங்கம் மீள்குடியேற்றம் மேற்கொண்டனர்.

இதன் போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் ஒரு லட்சம் ரூபா நிதியில் வீடு அமைக்குமாறு சமூர்த்தி வங்கி கணக்கிற்கு பணம் வைப்பிலிடப்பட்டு வீடு அமைக்கும் பணிகளை பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.

அப் பணத்தினை பொதுமக்களிடமிருந்து வவுனியா வடக்கு பணியாற்றும் சில சமூர்த்தி உத்தியோகத்தர்கள் பயனாளிகளிடமிருந்து கடித்தினை பெற்றுக்கொண்டு அவர்களே அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வழங்கப்பட்ட பணத்தினை கையாண்டனர்.

குறித்த சமூர்த்தி உத்தியோகத்தர்கள் ஒப்பந்தகாரர்கள் மூலம் வீடுகளை கட்டி முடித்து பயனாளிகளிடம் கையளித்தனர்.  அவ்வாறு வழங்கப்பட்ட வீட்டின் சுவர்களுக்கு சீமேந்து பூசப்படவில்லை , தரமற்ற மரங்களை கொண்டு கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன, ஒரு லட்சம் ரூபா பெறுமதியில் அவ் வீடுகள் அமைக்கப்படவில்லை என பொதுமக்கள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சமூர்த்தி பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

பாதிக்கப்பட்ட மக்களின் குற்றச்சாட்டுக்களை விசாரணைக்கு எடுத்து கொண்டு உள்ளக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். விசாரணைகள் மந்த கதியில் இடம்பெற்றமையினால் கொழும்பிலிருந்து விசேட குழுவோன்று வவுனியா வடக்கிற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். இதன் போது சமூர்த்தியில் பல ஊழல்கள் இடம்பெற்றமை தெரியவந்தது.

அதன் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட விசேட குழுவினர் ஜந்து சமூர்த்தி உத்தியோகத்தர்களை பணிநீக்கம் செய்ததுடன் மேலும் ஜவருக்கு எதிராக விசாரணை முன்னேடுத்து வருகின்றனர். மேலும் ஒரு சமூர்த்தி உத்தியோகத்தர் தாமாக பதவி விலகியுள்ளார்.

தற்போது அப்பகுதி மக்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சினால் எட்டு லட்சம் ரூபா பெறுமதியில் வீடு அமைத்து வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா வடக்கில் சமூர்த்தி உட்பட பல்வேறு திணைக்களங்களில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் அடங்கிய ஆவணங்களை கடந்த (20.08.2018) கொழும்பில் அமைந்துள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழு , உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் , கணக்காய்வாளர் நாயகம் அவர்களிடம் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You might also like